• Jan 18 2025

துர்காவிற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும் சாத்தியமானது எப்படி? துஷாரா விஜயன்

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த இயக்கிய ’ராயன்’ என்ற திரைப்படத்தில் அவருடைய தங்கை துர்கா என்ற கேரக்டரில் துஷாரா விஜயன் நடித்திருந்த நிலையில் அவரது கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டது என்பதும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பதும் படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் துர்கா என்ற கேரக்டரின் அங்கீகாரம், அன்பு மற்றும் வெற்றி சாத்தியமானது மக்களால் தான் என்றால் அது மிகை இல்லை என்று துஷாரா விஜயன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், திரு.தனுஷ் அவர்கள் இயக்கிய 'ராயன்' திரைப்படத்திற்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு பெரிய நன்றிகள். என் உழைப்பிற்கு கிடைத்த தங்களின் அன்பும், அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும்.



படத்துவக்கம் முதல் தற்போது மாபெரும் வெற்றிப்படமாக 'ராயன்' உருமாறியிருக்கும் வரையிலான பயணம் மிகப்பெரியது. வெகுசன மக்களிடம் என் கதாபாத்திரம் உட்பட ஏனைய கதாபாத்திரங்களையும் கொண்டு சேர்த்ததிலும் மாபெரும் வெற்றியை உறுதி செய்ததிலும் ஊடகத்தின் பங்கு முக்கியமானது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

எங்கள் இயக்குநர் திரு. தனுஷ் அவர்களுக்கும், சன் பிக்சர்ஸ் குழுமத்திற்கும் பெரிய, பெரிய நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். 'துர்கா'விற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்றால் அது மிகையில்லை.

தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்துக் கொண்டே இருப்பேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு என் பயணத்தை செழுமைப்படுத்துவேன்.

இவ்வாறு துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்



Advertisement

Advertisement