• Jan 19 2025

பிரேம்ஜி மனைவியின் இத்தனை இன்ஸ்டா போஸ்ட்டும் வியாபாரத்திற்கு தானா? வெளிப்பட்ட சுயரூபம்..

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன் பிரேம்ஜி மனைவி இந்து சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொடி குறித்த பதிவுகளை செய்திருந்த நிலையில் கடைகளில் விற்கப்படும் மசாலாவில் கலப்படம் இருப்பதாக கூறியிருந்தார் என்பதும் எனவே கலப்படம் இல்லாத மசாலா தூள்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பதிவுகள் எல்லாம் ஒரு உள்நோக்கம் கொண்டவை என்பது தற்போது தான் தெரிய வந்துள்ளது.

அதாவது பிரேம்ஜி மனைவி இந்து தனது அம்மா பெயரில் ஒரு மசாலா கம்பெனி தொடங்க உள்ளதாக தெரிகிறது. அவரும் அவருடைய அம்மாவும் சேர்ந்து தொடங்க உள்ள இந்த மசாலா கம்பெனியில், வீட்டில் செய்வது போல் சுத்தமான முறையில் மசாலா பொருட்களை கலந்து மசாலா பொடி தயாரிக்க இருப்பதாகவும் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.



கடையில் விற்கப்படும் மசாலாவில் கலப்படம் இருப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றும் ஆனால் நாங்கள் சுத்தமான முறையில் வீட்டில் செய்வது போலவே செய்து விற்பனை செய்ய போகிறோம் என்றும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரேம்ஜியின் மனைவி மற்றும் அவருடைய அம்மா சேர்ந்து ஆரம்பிக்க இருக்கும் இந்த பிசினஸ் நல்லபடியாக வளர தங்களது வாழ்த்துக்கள் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் பகுதியில் பதிவு செய்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் ’இதற்காகத்தான் நீங்கள் இதுவரை மசாலா பொடி குறித்த பதிவுகளை செய்தீர்களா? அந்த பதிவுகள் எல்லாம் பிசினஸ் உள்நோக்கம் கொண்டவையா? என்பது குறித்த கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

மொத்தத்தில் பிரேம்ஜி மனைவி ஒரு புதிய பிசினஸ் அம்மாவுடன் சேர்ந்து தொடங்க உள்ளார் என்பதும் ’பிரேம்ஜி மாமியார் மசாலா’ என்று அதற்கு பிறகு பெயர் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

Advertisement

Advertisement