• Aug 09 2026

கையும் களவுமாக மீண்டும் சிக்கிய இனியா? கோபிக்கு இந்த செருப்படி தேவையா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா பாக்கியாவுக்கு தெரியாமல் கோபியை காலேஜுக்கு அழைத்துப் போக பிளான் பண்ணுகின்றார். அந்த நேரத்தில் பாக்கியா வந்து யாருடன் கதைக்கிறா? என போனை பறித்து பார்க்க அதில் கோபி நம்பர் இருக்கின்றது.

இதனால் நாளைக்கு நடக்கிற பேரன்ட்ஸ் மீட்டிங்க்கு எனக்கு தெரியாம உங்க அப்பாவ கூட்டிப் போக போறியா என்று சொல்லி திட்டுகிறார்.

மறுபக்கம் கோபி ராதிகாவுடன் பேசி நாளைக்கு பேரன்ஸ் மீட்டிங்கு போக வருமாறு அழைக்கின்றார். அதற்கு ராதிகா உங்களுக்கு வெக்கமே இல்லையா நான் எதுக்கு வரனும் என பேசி விட்டு செல்கிறார்.


இதை தொடர்ந்து பாக்கியாவும் இனியாவும் காலேஜுக்கு புறப்பட ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் கூடவே வருகின்றார்கள். அங்கு பிரின்ஸ்பலிடம் பேச அவர் இனியாவுக்கு டிசி வாங்கி போகுமாறு சொல்கின்றார். இதனால் பாக்கியா ஒரு முறை மன்னித்து விடுமாறு கெஞ்சுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement