• Dec 29 2025

பாலிவுட்டில் இப்படி ஒரு வேட்டையா.? 1000 கோடி கிளப்பில் மாஸ் காட்டிய ‘துரந்தர்’.!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக, ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ‘துரந்தர்’, வெளியான 20 நாட்களிலேயே உலகளவில் 1000 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த தகவல் தற்போது இந்திய திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘துரந்தர்’, வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரம்மாண்ட காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, பலம் வாய்ந்த நட்சத்திர பட்டாளம் ஆகியவை இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தன. 


இந்தப் படத்தை இயக்கியுள்ள ஆதித்யா தார், ஏற்கனவே ஆக்‌ஷன் மற்றும் தேசப்பற்று கலந்த திரைப்படங்களால் ரசிகர்களிடையே தனி இடம் பிடித்தவர். ‘துரந்தர்’ மூலம் அவர் தனது இயக்கத் திறமையை இன்னொரு உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 

Advertisement

Advertisement