• Feb 27 2026

பணமோசடியில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்.. பரிதாபப்பட்டு உதவியது குத்தமா.? முழுவிபரம் இதோ

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜி.வி.பிரகாஷ்குமார், சமீபத்தில் ஒரு மோசடி சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 ஜி.வி.பிரகாஷுக்கு சமீபத்தில் ஒரு எக்ஸ்தள கணக்கில் இருந்து தனிப்பட்ட செய்தி வந்தது. அதில், ஒரு நபர் தன் குடும்ப சூழ்நிலையை பகிர்ந்து, உதவி கோரியுள்ளார். குறிப்பாக, “எங்களுக்கு சிறு வயதில் அப்பா தவறி விட்டார். அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்து கொண்டிருந்தார். 

இப்போது அம்மாவும் இறந்து விட்டார். இறுதி சடங்கு நடத்துவதற்கு கூட பண வசதி இல்லை. இதனால் நானும் தங்கையும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம். அம்மாவிற்கு இறுதி சடங்கு பண்ணுவதற்கு உதவி பண்ணுங்கள்.” என்று கூறப்பட்டிருந்தது. 

இது போன்ற பகிர்வுகள், பொதுவாக சமூக வலைத்தளங்களில் பரிதாபத்தை உருவாக்கும். அந்தப் பதிவினைப் பார்த்து பரிதாபப்பட்ட ஜி.வி.பிரகாஷ்குமார், உதவி கேட்டு வந்தவருக்கு ரூ.20,000 அனுப்பி உதவியுள்ளார்.


மேலும், அவர் செய்த பண உதவியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் பலரும் அந்த கணக்கிற்கு பணம் அனுப்பி உதவி செய்தனர்.

ஆனால், தற்பொழுது அந்த சமூக வலைத்தள பதிவு 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய பதிவு என தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம், ஜி.வி.பிரகாஷ்குமார் ஏமாற்றப்பட்டுள்ளார் என பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement