தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மலையாள சினிமாவில் பளிச்சென்ற முத்திரையை பதித்துள்ள மமிதா பைஜு இணைந்து நடித்திருக்கும் ‘Dude’ (டியூட்) திரைப்படம், அதன் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.22 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இப்படம் நேற்றைய தினம் (அக்டோபர் 17, 2025) வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
'Dude' என்பது ஒரு ரொமான்டிக் காமெடி கதையம்சத்தை மையமாகக் கொண்ட திரைப்படமாகும். சமீப காலமாக தமிழில் நன்கு வரவேற்கப்படும் பாணியில், இந்த படமும் நகைச்சுவையையும் காதலையும் இணைத்து பார்வையாளர்களை ஈர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன், தனது ‘Love Today’ படத்தின் வெற்றிக்கு பின், இன்னொரு காதல் கதையில் எப்போது நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. அந்தவகையில், ‘Dude’ படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டதாகவும், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் தற்பொழுது வெளியான வசூல் விபரம் திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் திரண்டதையும், முன்னணி நகரங்களில் முன்பதிவுகள் சிறப்பாக நடந்ததையும் சுட்டிக்காட்டுகின்றது.
Listen News!