• Oct 23 2025

வனத்தின் உணர்வை மீண்டும் நினைவுபடுத்தும் "கும்கி-2".. படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வனம் , மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கிடையேயான உணர்வுப் பிணைப்பை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தும் இயக்குநராக பெயர் பெற்றவர் பிரபு சாலமன். 2012 ஆம் ஆண்டு வெளியான அவரது திரைப்படம் "கும்கி" தமிழ்த் திரையுலகில் புதிய அதிர்வலைகளை உருவாக்கியது. இப்போது, அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள “கும்கி 2” திரைப்படத்தின் டீசர் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


“கும்கி 2” திரைப்படம் ,மனிதனும் விலங்கும் பகிரும் பாசம், மற்றும் அதிகாரத்தின் பெயரில் அழியும் வன வாழ்வை மையமாகக் கொண்டு நகர்கிறது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள மதி வனத்துக்குள்ளேயே வளர்ந்தவன். சிறிய வயதிலேயே யானைகளுடன் வாழ்ந்தவன். அந்த பிணைப்பு, கதையின் மையமாக அமைந்துள்ளது. அர்ஜுன் தாஸ் இப்படத்தில் மதிக்கு எதிரான வேடத்தில் தோன்றுகிறார். மேலும், இப்படம் நவம்பர் 14ம் தேதி ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement