ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சர், நடிகர் பவன் கல்யாண் நடித்த "OG" திரைப்படம் வருகின்ற அக்டோபர் 23, 2025 அன்று நெட்ப்ளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் கடந்த செப்டெம்பர் 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
“OG” திரைப்படம் பவன் கல்யாணின் சிறப்பான தோற்றத்தில் வெளியான படம் என்பதாலேயே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படம் திரையரங்குகளில் வெளியானவுடன், பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. பவன் கல்யாணின் ஸ்டைல் , மாஸான காட்சி, ஆழமான கதைக்களம் மற்றும் ரசிகர்களை ஈர்த்த இயக்கம் என்பன “OG” படத்தை பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாக மாற்றியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, படக்குழு தற்போது Netflix ஓடிடி தளத்தில் இப்படம் அக்டோபர் 23 வெளியாகும் என்பதை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், திரையில் பார்க்க முடியாத ரசிகர்கள் மற்றும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
Listen News!