தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டது. அதனை எதிர்த்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராடி வருகின்றார்கள்.
இவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திய போதும் இதுவரை போராட்ட முடிவு வரவில்லை. இதனுடைய பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் தமது ஆதரவை நேரிலேயே அழித்து வந்தனர். மேலும் சமீபத்தில் மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், பரந்தூர் மக்களை சந்திப்பதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாகவே களத்திற்கு வந்துள்ளார். இதற்காக காவல்துறை தரப்பில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் போராட்டக் குழுவினரை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விஜய் சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
மேலும் மக்களை சந்திப்பது மட்டும் தான் விஜய் அது குறிக்கோள் என்பதால் காவல்துறை அனுமதி அளித்த இடத்திலேயே சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புரூஸ்லீ ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதே வேளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பற்றி செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் ஆனந்த் சீறிப்பாய்ந்த காணொளி இணையத்தில் வைரலாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!