பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு தற்போது "கண்ணப்பா" என்ற காவியத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பிரபுதேவா இப்படம் குறித்து சுவாரஷ்யமான பேசியுள்ளார்.
"கண்ணப்பா" திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்க ஹீரோயினியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். மேலும் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தில் பிரபு தேவா மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ளார்.
பிரபு தேவா பேசுகையில், "இந்த படத்திற்காக மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறேன். மோகன் பாபு சார் எனக்கு போன் பண்ணி என்னை வர சொன்னாரு அப்போ நான் வரணுமா சார் என்று கேட்டேன் அதற்கு அவரு "நீ வரலனா நான் உன் வீட்டுக்கு வந்துடுவேன்னு சொன்னாரு. நானே வந்துட்றேன் சார், என்றேன். மூன்று பாடல்களிலும் நடனம் பெரிதாக இருக்காது, ஆனால் எமோஷனல் இருக்கும். அதேபோல் கிளைமாக்ஸ் பாடல் மிகவும் முக்கியமானது, "அதில நீ முக்கியமாக இருக்க வேண்டும்" என்று சொன்னார் எனக்கு நான் எப்படி கிளைமேஷ் சீன்ல வாராது என்று குழம்பிவிட்டேன். என்று கூறினார்.
மேலும் " எனக்கும், கிளைமாக்ஸில் பாடல் என்பது இது தான் முதல் முறை. அதேபோல் அதில் நடனத்தை விட எமோஷனலை கொண்டு வர வேண்டும் என்பது சவலாக இருந்தது, அதனால் பணியாற்றவும் ஆர்வமாகவும் இருந்தது. விஷ்ணு எனக்கு தம்பி போல, மோகன் பாபு சார் எனக்கு பெரிய அண்ணன். அவருக்கு என் வாழ்த்துகள். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் படம் வெற்றி பெறுவதற்கு என்று கூறினார் பிரபு தேவா.
Listen News!