• Aug 23 2025

மாலைதீவின் சுற்றுலாத் துறை தூதுவரான பிரபல நடிகை..! யார் தெரியுமா.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் அழகியும், உலகளாவிய ரசிகர்களை கவர்ந்த முன்னணி நடிகையுமான கத்ரீனா கைஃப், தற்போது மாலைதீவு நாட்டின் சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக (Global Tourism Ambassador) நியமிக்கப்பட்டுள்ளார். இது மாலைதீவின் பன்னாட்டு சுற்றுலா பிரச்சார முயற்சிகளில் பெரும் மைல்கல் ஆகும் வகையில் பார்க்கப்படுகின்றது.


மாலைதீவின் சுற்றுலாத் துறையை உலகளவில் பிரசாரம் செய்வதற்காக Maldives Marketing and PR Corporation (MMPRC) மூலம் மேற்கொள்ளப்படும் அதிகாரபூர்வ கூட்டமைப்பின் கீழ் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.


கத்ரீனாவின் புகழும், பன்முகமான ரசிகர்கள் பட்டாளமும் இந்த நியமனத்தை மேலும் பிரபலமாக்கி உள்ளது. பிரிட்டனில் பிறந்த இவர், இந்தியாவில் அதிகமான ஹிட் படங்களில் நடித்ததோடு, உலகம் முழுவதும் பரவலான பிரபலத்தையும் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement