• Jul 04 2025

‘முத்த மழை’ பாடலின் வெற்றிப் பின்னணி... – பாடலாசிரியர் சிவா ஆனந்த் உருக்கம்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இசை உலகில் சமீபத்தில் வைரலாகிய பாடல் ஒன்று என்றால், அது ‘முத்த மழை’ தான். இசை ரசிகர்கள் மத்தியில் இதயம் வருடும் மெலடி பாடலாகத் திகழும் இந்த பாடல், வெளியான சில நாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் மின்னலாகப் பரவியது. காதலின் நெஞ்சம் நெகிழும் உணர்வுகளை நெஞ்சுக்குள் துளைத்துச் செல்லும் இந்தப் பாடலை எழுதியவர், இளம் பாடலாசிரியரான சிவா ஆனந்த்.


இந்த வெற்றி குறித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவருடைய மனம் முழுதும் பரவசத்துடன் சொல்லப்பட்ட வார்த்தைகள், ஒரு பாட்டின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் எளிமையான உணர்வையும், பணிவையும் வெளிக்கொணர்ந்துள்ளது.

‘முத்த மழை’ பாடல், ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, மணிரத்னம் இயக்கிய திரைப்படத்தில் இடம்பெற்றது. ஒரு காதல் மழையின் துளி போல, மென்மையான ஸ்வரங்களுடன் இது அமைந்திருந்தாலும், அதன் தாக்கம் ஓரிரு நாட்களில் சினிமா ரசிகர்களின் Playlist-ஐ ஆட்கொண்டுவிட்டது. இதில் பாடலாசிரியர் சிவா ஆனந்த் தனது பங்களிப்பை மிக நுட்பமாகவும், நேர்த்தியாகவும் மேற்கொண்டிருந்தார்.


தற்பொழுது,"‘முத்த மழை' ஹிட் ஆகும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கல. எல்லா புகழும் ரகுமான் சாருக்கு தான். அற்புதமான டியூன்களை போட்டுள்ளார். தமிழில் எத்தனையோ நல்ல பாடல்களை பல வருடங்களுக்கு நினைவில் வச்சிருக்கிறோம். அந்த மாதிரியான பாடல்கள் இன்னும் வரணும்னு நான் நினைத்திருக்கிறேன். இப்போ என்னோட பாட்டையே அந்த லிஸ்டில் சேர்த்துக் கொண்டாடுவது மனநிறைவாக இருக்கு. பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்த மணிரத்னம் சாருக்கு நன்றி,” என்று கூறியுள்ளார் சிவா ஆனந்த். 

Advertisement

Advertisement