• Jan 18 2025

எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி யார் தெரியுமா?- இத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் தான் கனிகா. இவர் தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் என்னும் சீரியலில் ஈஸ்வரி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். எனவே அவர் கூறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

திவ்யா என்னும் இயற்பெயரைக் கொண்ட தமிழிப் பெண்ணான இவர் மதுரையில் தான் கல்வி பயின்றிருக்கிறார்.தொடர்ந்து ராஜஸ்தானில் மேல்ப் படிப்பை படித்த இவர் அங்கு தான் ஹந்தியும் படித்தாராம். இவருக்கு பாடுவது என்றால் ரொம் பிடிக்குமாம் அதே போல நன்றாக சமைக்கவும் தெரிந்தவராம்.அத்தோடு சூப்பராக படிக்கக் கூடியவராம். இவர் ராஜஸ்தானில் படிக்கும் போது தான் கல்சரல் ப்ரோகிராம் ஒன்றில் கலந்து கொண்டாராம்.


அப்போது இவருக்க 19 வயசு தானம். இந்த நிகழ்வில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கு பற்றி மிஸ் சென்னை என்ற பட்டத்தையும் பெற்றாராம்.இந்த மிஸ் சென்னை வெற்றி பெற்ற போட்டோ ஒரு அட்டைப்பட புத்தகத்தில் வந்ததைப் பார்த்து இயக்குநர் ஷங்கர் இவரை அனுகி பாய்ஸ் படத்தில் நடிக்க அழைத்தாராம்.


ஆனால் இவர் படிப்பு தான் முக்கியம் என்பதால் அதில் நடிக்க மறுத்து விட்டாராம். அதன் பின்னர் படிப்பு முடிந்ததைத் தொடர்ந்து தான் 5 ஸ்டார் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இந்தப் படத்தில் ஈஸ்வரி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாராம்.


பின்னர் டப்பிங் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்ததாம். அதனால் முதலில் சச்சின் படத்தில் ஜெனிலியா காரெக்டருக்கு டப்பிங் கொடுத்தாராம். தொடர்ந்து அந்நியன் பட சதாவுக்கும் என பல திரைப்படங்களில் டப்பிங் பேசியுள்ளாராம். அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாவுக்கும் டப்பிங் கொடுக்க அழைக்கப்பட்டாராம். இருப்பினும் இவருடைய குரல் மென்மையாக இருப்பதால் இவரை மாற்றி விட்டாராம் மணிரத்னம்.

தொடர்ந்து தமிழில் ஆட்டோகிராப் ,எதிரி ,வரலாறு போன்ற இன்னும் சில படங்களில் நடித்திருக்கின்றார். இதில் வரலாறு தான் இவருடைய கடைசித் திரைப்படமாம்.மேலும் ஷாம் ராதா கிருஷ்ணன் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டாராம்.அத்தோடு அமெரிக்காவிலும் செட்டில் ஆகினாராம்.


இருப்பினும் இவருடைய குழந்தைக்கு பிறந்து 7 வது நாளில் ஹாட் ஆப்பிரேஷன் செய்யப்பட்டதாம். கடவுள் நம்பிக்கை அதிகமாகக் கொண்ட இவர் சாய்பாபாவிடம் வேண்டுதல் நடத்தியன் காரணமாக தன்னுடைய மகன் உயிர் பிழைத்துக் கொண்டாராம் என்று கூறுவாராம் . அத்தோடு இப்போது மகன் வளர்ந்து ஆரோக்கியமாக இருக்கின்றாராம்.


அதே போல இவருடைய இம்மாவுக்கு மார்புப் புற்று நோய் வந்ததாம். இதுவும் இப்போது அவருடைய அம்மாவும் குணமடைந்து நன்றாக இருக்கின்றாராம். இந்த இரண்டு விடயங்களும் தான் இவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத விடயங்களாம்.அத்தோடு  தொடர்ந்து நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றாராம்.அதன்படி தான் இவருக்கு எதிர் நீச்சல் சீரியலில் வாய்ப்புக் கிடைத்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement