• Apr 01 2023

1 கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு No சொன்ன நடிகர்...காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..! -

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் தான் நடிகர் ராஜ்கிரண். இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் பிறந்தவர். இவர் திரையுலகில்  நடிகர் மட்டுமல்லாமல் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

அத்தோடு இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த “என்ன பெத்த ராசாவே” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். எனினும் அதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே, கொம்பன், வேங்கை, சண்டக்கோழி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  உள்ளார். இவர் இதுவரை திரையுலகில்  30 படங்களுக்கு மேல் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார்.

16 வயதில் சென்னைக்கு வந்து முதன்முதலில்  வாங்கிய சம்பளம் 4 ரூபாய் 50 பைசா தான். அப்போது இவர் தினக்கூலி யாக இருந்துள்ளார். இதன் பின் இவரது உழைப்பையும், நேர்மையையும் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனியிலேயே கிளர்க்காக பதவி உயர்வு கொடுத்தார்கள்.அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி சொந்த விநியோக கம்பெனி ஆரம்பித்து படங்களை இயக்கினார்.


அத்தோடு இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட்டானது இதை அடுத்து கடந்த 1996-ம் ஆண்டு கே.வி.பாண்டியன் இயக்கத்தில் நடித்த மாணிக்கம் என்கிற படத்துக்காக தான் அவர் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கினார் .

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். அத்தோடு இப்படத்தின் மூலம் தான் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய தமிழ் ஹீரோ என்கிற அந்தஸ்தை பெற்று இருந்தார் நடிகர் ராஜ்கிரண்.

இவருடைய உண்மையான பெயர் மொய்தீன் அப்துல் கதார். திரையுலகிற்கு இவர் ராஜ்கிரண் என்ற பெயரை மாற்றிக் கொண்டார்.அத்தோடு, இவருக்கு இரண்டு திருமணம் ஆகிவிட்டது. 


இவருடைய முதல் மனைவிக்கும் இவருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்து கொண்டனர். இதன் பின் பத்மஜோதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகளும் இருந்தார்.

ராஜ்கிரணின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவர் தான் ஜீனத் பிரியா. ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் முனீஸ்ராஜாவுக்கும் இடையில் காதல் மலர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். அத்தோடு ஆரம்பத்தில் இரண்டு பேர் வீட்டிலும் சில காரணங்களால் இந்தக் காதலை ஏற்கவில்லை.இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார். இதனால் மனம் நொந்த ராஜ்கிரன், இனி என் மகளே இல்லை என்று கோபமுடன் அறிவித்துவிட்டார்.


ராஜ்கிரண் நடித்த படங்களில் பெரும்பாலும் அவர் வேட்டி சட்டை அணிந்து நடித்திருப்பார். மேலும் இப்படியொரு நிலையில்  கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல வேட்டி நிறுவனம் ஒன்று ராஜ்கிரனிடம் வேட்டி விளம்பரத்தில் நடிக்க அழைப்பு விடுத்தது. அந்த விளம்பரத்தில் ராஜ்கிரண் நடித்த மறுக்கவே 25 லட்சம் 50 லட்சம் கடைசில் ஒரு கோடி வரை சம்பளம் தர முன் வந்தது. ஆனால் அப்போதும் ராஜ்கிரண் ஒப்புக்கொள்ளவில்லை.இறுதியில் அந்த நிறுவனம் இவ்வளவு தொகை கொடுத்தும் நடிக்க மறுக்கிறீர்கள் அதற்கான காரணத்தை மட்டுமாவது சொல்லுங்கள் என்று ராஜ்கிராடினம்கேட்டுள்ளனர். எனினும் அதற்கு அவர் வேஷ்டி என்பது ஏழை விவசாயிகள் உடுத்தும் ஒரு உடை. மிஞ்சிபோனால் அதை அவனால் 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுத்தீங்க என்றால் அந்த காசியும் அவன் கிட்ட இருந்து தானே வசூலிப்பீங்க அதான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement