• Jan 18 2025

'குக்வித் கோமாளி'யில் வரும் வெளிநாட்டுப் பெண் ஆன்ட்ரியன் யார் தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வெளிநாட்டவராக இருந்தாலும் சரளமாகத் தமிழ் பேசி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஆன்ட்ரியன். இவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர். இருப்பினும் தனது 6ஆவது வயதிலேயே குடும்பத்துடன் புதுச்சேரியில் செட்டில் ஆகி விட்டார்.

அதுமட்டுமல்லாது இவர் தனது சிறு வயது முதலே தமிழையும் கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்து விட்டார். மேலும் சிறு வயது முதலே இவருக்கு ஊடகத் துறையில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. இதனையடுத்து கொஞ்சமா கொஞ்சமாக மாடலிங் துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டார்.


இந்த முயற்சியின் பயனாக ரஜினியின் நடிப்பில் 2007 இல் வெளியான சிவாஜி படத்தில் வரும் ஒரு பாடலில் டான்ஸ் ஆடி இருக்கின்றார். அந்த சமயத்தில் இவர்க்கு இந்த சின்ன வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இருப்பினும் பின்னர் பட வாய்ப்புகளும் வந்து குவியத் தொடங்கின.

அந்தவகையில் 'எனக்குள் ஒருவன், வீர சிவாஜி, ரம்' போன்ற படங்களில் சின்ன சின்னக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இருப்பினும் இப்போ வரைக்கும் இவரை பெரிதாக யாருக்குமே தெரியாது. குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்திருக்கின்றது.


மேலும் சமீபத்தில் அபியும் நானும் தொடரில் நடித்த ஹீரோவுடன் 'மேல்நாட்டு மருமகன்' என்ற படத்திலும் நடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது கால் நடை மருத்துவ செவிலியராக பயிற்சியும் பெற்றிருக்கின்றார். இதன் பின்னர் தான் திரைப்படத்துறையில் கால் பதித்தும் இருக்கின்றார்.

மேலும் துணைக் கதாபாத்திரத்தில் தான் நடித்த படங்களிற்கு எல்லாம் தானே டப்பிங் பண்ணி இருக்கார். 2016 இல் 'கண்டேன் காதல் கொண்டேன்' படத்தில் நடித்திருந்தார். அத்தோடு ரஜினிமுருகன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


திரைப்படங்கள் மூலமாக இவரைப் பலருக்கும் தெரிந்திருக்காவிட்டாலும் தற்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலரின் மனங்களில் இடம்பிடித்திருக்கின்றார். மேலும் இவருக்கு சமையலில் ஆர்வம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement