• Oct 08 2024

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெறவுள்ள மலர் எது தெரியுமா? லேட்டஸ் தகவல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தான் இளையதளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். தற்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலிலும் கால் பதித்தார் விஜய். அதன்படி தமிழக வெற்றிக்  கழகம் என்ற பெயரில் அதிகாரபூர்வமாக அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்தார். ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் அரசியல் என இரண்டையும் தற்போது வரையில் பேலன்ஸ் பண்ணி வருகின்றார்.

கோட் படத்தை தொடர்ந்து தனது 69 வது படத்திலும் நடித்து முடித்த பிறகு தான் முற்று முழுவதுமாகவே சினிமா துறையில் இருந்து விலகி மக்களுக்காக அரசியலில் பயணிக்க இருப்பதாக விஜய் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.


இதன் காரணமாகவே கோட் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் தனது கட்சியை தொடங்கியதில் இருந்தே  அவரின் ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் அவருக்கு தொண்டர் ஆகினார்கள். 

இந்த நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் வாகைமலர் இடம்பெற உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு வண்ணக் கொடியின் மத்தியில் வாகைமலர் இடம்பெற உள்ளதாகவும் வாகை என்றால் வெற்றி, விஜய் என்றால் வெற்றி என்ற அடிப்படையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, பண்டைய காலங்களில் போரில் வெற்றி பெறும் அரசர்களுக்கு வாகை மலர் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement