• Oct 04 2024

கோட் 6 நாட்களில் செய்த வசூல்... எத்தனை கோடி தெரியுமா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. தமிழகம் தாண்டி எல்லா இடங்களிலும் விஜய்யின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். 


ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் கோட்ட திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.  முதல் நாளில் ரூ. 126 கோடியுடன் தொடங்கிய வசூல் வேட்டை தாறுமாறாக நடந்து வருகிறது.


பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் பேவரெட் படமாக அமைந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் 6 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 312 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 


Advertisement

Advertisement