• Sep 17 2024

வரலாற்றில் முதன் முறையாக பிக் பாஸ் சீசன் 8 படைக்கவுள்ள சாதனை! ஹைலைட்டே இதுதான்?

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனாலும் தற்போது ஆரம்பமாக உள்ள எட்டாவது சீசனில் இருந்து அதிரடியாக வெளியேறி இருந்தார். அதற்கு காரணம் அவருக்கு உள்ள சூட்டிங் நெருக்கடி தான்.

இதை தொடர்ந்து அவருடைய இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வி காணப்பட்டது. மேலும் பலரது பெயரும் இதில் வரிசை கட்டி வந்தன. ஆனாலும் இறுதியில் இதற்கு தகுந்தவர் விஜய் சேதுபதி தான் என அதிகார்வ பூர்வமாகவே அறிவித்தார்கள்.


அதன் பின்பு மக்கள் செல்வன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

இந்த நிலையில், தற்போது வரலாற்றில் முதன் முதலாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனின் ப்ரோமோவை மக்கள் வெளியிட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.

மேலும் இந்த ப்ரோமோ சென்னையில் உள்ள ஆறு இடங்களில் இருந்து வெளியாக உள்ளது. இதன் காரணத்தினால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காணப்படுகின்றார்கள். இதுவரை விஜய் டிவியில் இருந்து தான் ப்ரோமோ வெளியாகி வந்த நிலையில், தற்போது மக்களால் ப்ரோமோ வெளியிடப்படுவது தான் இந்த சீசனில் ஹைலைட்டாக காணப்படுகிறது.


Advertisement

Advertisement