• Jan 19 2025

கோலிவுட்டில் வரிசைகட்டி ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள்.. இப்பவே எனர்ஜி எகிறுதே..!!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் பெரிய நடிகர்களின் படம் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் தற்போது அடுத்தடுத்து விக்ரம், விஜய், கமலஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன் என பிரபல நடிகர்களின் படம் வெளியாக உள்ளன.

உலகநாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி இந்த திரைப்படமும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. ஆனால் இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் சலிப்பை தான் பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன் பின்பு விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலால் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வாழை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது விஜயின் கோட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அனேகமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதோடு மறைந்த விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தின் ஊடாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு பல திருப்பங்கள், சண்டைகள், டெக்னாலஜி என்பவற்றை வைத்து இந்த திரைப்படம்வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.


இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக  உள்ளது. அத்துடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்றும், சூர்யா நடிக்கும் கங்குவா  திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி அன்றும் வெளியாக உள்ளது.

அதை போல  விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை 2 திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது அடுத்தடுத்து எதிர்பார்த்த திரைப்படங்கள் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement