• Sep 13 2024

வெற்றி கொண்டாட்டத்தில் லியோ... எகிறும் வசூல் வேட்டை... எத்தனை கோடி தெரியுமா?

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளிவந்த வெற்றி திரைப்படம் லியோ. தற்போது அமோகமாக வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் இன்னுமொரு சந்தோஷமான செய்தி வெளிவந்துள்ளது.


மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்கள் இணைந்ததால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, படமும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அந்த வகையில் நேற்று கோலாகலமாக லியோ வெற்றி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


ரூ. 250 முதல் ரூ. 300 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் விஜய்யை தாண்டி த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா என பல கலைஞர்கள் நடித்தார்கள், அவர்கள் அனைவருக்குமே மக்களிடம் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. அனிருத் இசையமைப்பில் வெளிவந்த அனைத்து பாடல்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.


வெற்றி விழா கொண்டாடப்பட்ட லியோ கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானதில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்த படக்குழுவும் நேற்று நவம்பர் 1, வெற்றிவிழா கொண்டாடினார்கள் இந்நிலையில் நடிகர் விஜய்யின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த நிலையில் படம் மொத்தமாக இதுவரை ரூ. 550 கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படமாக இது காணப்படுகிறது இதனால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். 

Advertisement

Advertisement