• Nov 12 2025

லியோ வெற்றி விழா; 'மங்காத்தா' அஜித் பற்றிப் பேசி அரங்கை அதிரவிட்ட அர்ஜுன்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா, நேரு ஸ்டேடியத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.  

இந்த நிலையில், குறித்த விழாவில் அஜித் மற்றும் த்ரிஷா தொடர்பில் பேசியுள்ளார் அர்ஜுன். இதன்போது அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் சத்தம் எழுப்பியுள்ளனர்.


நேற்றைய தினம் நடைபெற்ற லியோ சக்ஸஸ் நடக்கும் அரங்கம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அரங்கில் கூடியுள்ள ரசிகர்களும் லைட் அடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்கள்.குறித்த விழாவில், விஜய், அர்ஜுன், அனிருத், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளர் லலித் குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது பேசிய அர்ஜுன், த்ரிஷாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். முதலில் அஜித்தின் மங்காத்தா படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடித்திருந்தேன். இப்போ லியோ என கூறினார். அர்ஜுன் அஜித் பற்றி சொன்ன உடனேயே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கூச்சலிட்டு கொண்டாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement