• Oct 30 2024

நான் Plastic Surgery பண்ணினேன்.? காரணத்தை போட்டுடைத்த நயன்! புது லுக்கில் லேட்டஸ் கிளிக்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து வருகின்றார். மேலும் நயன்தாரா தற்போது தனது சினிமா வாழ்க்கை ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பிசினஸ் செய்ய ஆரம்பித்து அதில் அதிலும் கொடிகட்டி பறக்கின்றார்.

மலையாள நடிகையான நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து விஜய், அஜித், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர், நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் நயன்தாராவை தேடிக் கொண்டன.

ஒரு கட்டத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது அதன் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்தார். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் காதலித்த இவர்கள் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின்பு நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார்.


திருமணத்திற்கு பிறகு நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை அதிகமாக கொண்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் தான் செல்லும் பட சூட்டிங் இடங்களுக்கும் தனது குழந்தைகளையும் கூட்டி செல்கின்றார். அடிக்கடி  போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், நயன்தாரா வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருப்பதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அதற்குரிய பதிலை தற்போது நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், புருவத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். அதை அழகுப்படுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்வேன். என் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம் செய்திருக்கின்றேன் என நினைக்கின்றீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை. டயட் காரணமாக உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதனால் தான் கன்னங்கள் ஒட்டி இருப்பது போலவும் தடுத்து இருப்பது போலவும் தெரிகின்றது என நயன்தாரா விளக்கம் கொடுத்துள்ளார்



Advertisement