• Aug 08 2025

தர்ஷன் நடிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’ ட்ரெய்லர் வெளியீடு...! ரசிகர்களிடம் வைரலாகும் காட்சிகள்..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

 தமிழ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம்  வருபவர் நடிகர் தர்ஷன்.இவர்  இப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த 'ஹவுஸ் மேட்ஸ்' திரைப்படம்  ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபேன்டஸி, ஹாரர் மற்றும் நகைச்சுவை மையமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தர்ஷன் மீண்டும் ஹீரோவாக திரும்பும் முக்கிய படமாகும். இவர் கனா மற்றும் தும்பா ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றார்.


இப்படத்தை அறிமுக இயக்குநராக ராஜவேல் இயக்கியுள்ளார். இவர் முன்பாக இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். விஜய் பிரகாஷ் மற்றும் சக்திவேல் இணைந்து தயாரித்துள்ள ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் விநியோக உரிமையை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியிருக்கிறது, இது படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.


படத்தில் தர்ஷனுடன் காளி வெங்கட், அர்ஷா, சாந்தி பைஜு, வினோதினி, தீனா, அப்துல் லீ மற்றும் மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை ராஜேஷ் முருகேசனின் மாயாஜால இசையுடன் வர, ஒளிப்பதிவு சதீஷ் செய்யப்பட்டுள்ளது.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த கதை, திகில் மாறாக மனித உணர்வுகளையும், நடுத்தர குடும்பங்களின் அனுபவங்களையும் நையாண்டி கலவையுடன் புகுத்தி சொல்லப்படுகிறது. இந்நிலையில் ட்ரெய்லர் வெளியாகி  ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது. 

Advertisement

Advertisement