• Nov 12 2025

காக்கா, கழுகு சர்ச்சையான கதை... கிரேட் எஸ்கேஎப் ரத்தினகுமார்... அட என்ன இப்படி பண்ணிட்டாரு...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா, நேரு ஸ்டேடியத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில். இந்த நிலையில் குறித்த விழாவில் குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்லி அரங்கத்தை அலறவைத்த ரத்னகுமார் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. 


குறித்த லியோ வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார், 'தனக்கு சினிமா ஆசை வர காரணமே தளபதி விஜய் தான். "நாம எவ்ளோ உயரத்தில பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகணும்' என பேசியுள்ளார். அதன்படி ரத்னகுமார் அப்படி பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்து கரவொலிகளை எழுப்பியுள்ளனர்.


ஏனென்றால் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கழுகு, காக்கா கதை சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகர் விஜய்யை தான் காக்கா என ரஜினிகாந்த் சொன்னாரா என ஏகப்பட்ட விவாதங்களும் ட்ரோல்களும் கிளம்பின. 


ரத்னகுமார் எவ்ளோ உயரத்தில் பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகணும் என்று லியோ வெற்றி விழா மேடையில் கூறியது. தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் ரஜனி கூறிய காக்கா, கழுகு கதைக்கு பதிலடியாகத்தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த விடையம் அதிகம் பேசப்படுவதால் தற்போது ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய கதை எழுதப்போவதாகவும் அதனால் சமூக வலைதளத்தில் இருந்து சில காலம் விலகி இருக்க போவதாகவும், மீண்டும் சந்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.