• Jan 18 2025

சூப்பர் சிங்கர் ஷிவாங்கியுடன் நெருக்கமாய் இருக்கும் அந்த நபர்? காதலென கிசுகிசு தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஷிவாங்கி.   இவரின் குறும்புத் தனமான பேச்சுக்கும் இவரின் இனிமையான பாட்டுத் திறமைக்கும் மிகப்பெரிய ரசிகர் வட்டாரமே அடிமை எனலாம். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிரபலத்தை வைத்து 'குத் வித் கோமாளியில்' வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தன்னுடைய நகைச்சுவையான திறமையால்   கோமாளியாக நடித்து  மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். 


இதையடுத்து இவருக்கு வெள்ளித்திரையில் பாடவும், நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி, சிவகார்த்திகேயனின் 'டான்' என்ற படத்தில் நடித்து மக்களை மகிழ்வித்தார்.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹஷ்வர்த்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஷிவாங்கியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 


இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை காதலா இருக்குமோ? என சந்தேகித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இதேவேளை, இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பாடல் பாடியபோது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் கிசுகிசுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement