• Dec 04 2023

வாங்கும் சம்பளத்திற்கு டார்கெட் பண்ணி விளையாடும் மாயா; வெளிய வந்தபிறகு தான் நிக்சன் பற்றி அறிந்தேன்! வினுஷா தேவி பகீர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வினுஷா தேவி பிக்பாஸ் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் மனம் திறந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.


மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். எனினும், இறுதியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வினுஷா தேவி, யுகேந்திரன் ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர்.


அதன்படி, நிக்சன் தன்னை அக்கா அக்கானு அழைத்துவிட்டு பின்னாடி உருவ கேளி செய்துள்ளார் என வினுஷா கூறியுள்ளார் . மேலும் அவர் கூறுகையில், 'திடீரென ஒரு நாள் சாரி கேட்டான், அது இதுக்காக தான் என்பது எனக்கு வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது. மாயா காலையில் எழுந்ததும் நாம இன்னைக்கு வாங்குற சம்பளத்துக்கு யாரை டார்கெட் செய்யணும்? அவங்கள என்ன செய்யலாம்? என சிலருடன் சேர்ந்து பேசி திட்டம் போடுவார். அதன்படி மக்கள் வெளியே இருந்து பார்ப்பது போல இந்த நிகழ்ச்சி கிடையாது' என மேலும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement