• Nov 22 2025

தல அஜித் ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட்.. "AK64" படப்பிடிப்பு எப்போது தெரியுமா.?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித் குமார், தனது அடுத்த திரைப்படமான "AK 64" குறித்த பல்வேறு அப்டேட்டுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு, தற்போது ஒரு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


படத்தினை இயக்கவிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "AK 64" திரைப்படத்தின் ஷூட்டிங் 2026 பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல், அஜித் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நடிகரின் தற்போதைய கார் ரேஸிங் பயணமும் அதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

“AK 64” என்பது அஜித் நடிப்பில் உருவாகும் 64வது படம் என்பதாலேயே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கவிருப்பவர் "குட் பேட் அக்லி" படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன். அவர் தற்போது திட்டத்திற்காக முழுமையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, அஜித் தனது கார் ரேஸிங் பயணத்தில் முழுமையாக ஈடுபட்டிருப்பதால், படப்பிடிப்பு தள்ளிப்போயிருப்பதாகவும் கூறியுள்ளார்.


அஜித் ரசிகர்களுக்கிடையே கடந்த சில மாதங்களாகவே “AK 64” பற்றி பல்வேறு வதந்திகளும் அப்டேட்டுகளும் வெளியான நிலையில், இது ஒரு அதிகாரபூர்வமான உறுதிப்படுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.

அத்துடன், "அஜித் சார் தற்போது மிக முக்கியமான பயணத்தில் இருக்கிறார். அவரது ரேசிங் பயணம் 2026 ஜனவரி 18 வரை நீடிக்கும். அதனால் அவர் பிப்ரவரி மாதத்துக்குப்பிறகே ஷூட்டிங்கிற்குத் தயாராக இருப்பார்." எனவும் ஆதிக் கூறியுள்ளார். 


Advertisement

Advertisement