விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்ச்சியில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, இயக்குனர் பிரவீன் காந்த், சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன், இன்ஸ்டா பிரபலங்களான ரம்யா ஜோ மற்றும் சுபிக்ஷா, துஷார் , கானா வினோத், அகோரி கலையரசன், ஆர்ஜே கெமி மற்றும் நந்தினி, ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், திருநங்கை அப்சரா, சீரியல் நடிகை ஆதிரை, மாடல் அழகியான வியானா உள்பட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9ன் இன்றைய நாளுக்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது விரிவாக பார்ப்போம்.
அதில் முதலாவது டாஸ்க் பற்றி வாசிக்கப்படுகிறது. 'ஒரு நாள் கூத்து' இவர்கிட்ட ஒரு நாள் சரக்கு தான் இருக்கு.. இதுக்கு மேல இவர் இந்த ஷோவ்ல தாங்க மாட்டார். அவர் பண்றதுக்கு எதுவுமே இல்லை என்று நினைப்பவர்களை தேர்வு செய்யுமாறு ஹவுஸ்மேட்ஸ்க்கு கூறப்பட்டது.
அதில் துஷார் முதலாவதாக திருநங்கை அப்சரா சி.ஜேவை தெரிவு செய்கின்றார் . அதன் பின்பு பியானா யார் கூடயும் சேராமல் தனிமையில் இருப்பதாக குற்றம் சாட்டி அவரையும் தேர்வு செய்கின்றனர்.
இறுதியில் திவாகரை தெரிவு செய்கிறார் பிரவீன். அவர் மக்களுக்காக எதையும் செய்யாமல் கேமரா முன் செயல்படுகிறார் என்று கூறுகிறார் பிரவீன். இதுதான் தற்போது வெளியான முதல் ப்ரோமோ..
Listen News!