தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
கிராமத்துக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இட்லி கடை படத்தில் சாதாரண இட்லி கடைக்காரர் போலவே வாழ்ந்திருப்பார் தனுஷ் . ஆரம்பத்தில் இந்த படம் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்ற நெகட்டிவ் கருத்தும் முன்வைக்கப்பட்டது.
எனினும் இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு தனுஷ் தனது குடும்பத்துடன் சென்று வழிபட்டுள்ளார்.
இந்த நிலையில், இட்லி கடை படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் மீண்டும் தனது குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் உறவினர்கள் தனுஷை பார்ப்பதற்காக ஆர்வத்துடன் காத்திருந்துள்ளனர்.
எனினும் பொது மக்கள் மற்றும் உறவினர்கள் தனுஷை பார்த்து பேச முயன்ற போது அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். தனுசை பார்க்க காலையில் இருந்து ஆவலுடன் காத்திருந்த பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைத்த நிலையில் இது தற்போது பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!