• Jan 19 2025

படங்களில் தொடர் தோல்வி, நடிகை கங்கனா எடுத்த திடீர் முடிவு- உறுதி செய்த அவரது அப்பா

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடித்து வரும் நடிகை தான் கங்கனா ரணாவத். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏராளமான மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இறுதியாக இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவான வரவேற்பைப் பெறவில்லை.


இதே போல ஹிந்தியில் சமீப காலமாக நடிக்கும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. போட்ட பணத்தில் 10 சதவீதம் கூட திரும்ப வரவில்லை என அவரது படங்களை பற்றிய புள்ளிவிவரங்கள் வருகின்றன.

படங்கள் தொடர்ந்து தோல்வி அடையும் நிலையில் தற்போது கங்கனா அரசியலில் குதிக்க இருக்கிறார். அவர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் சார்பில் போட்டியிட இருக்கிறார்.இதை கங்கனாவின் அப்பா உறுதி செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement