• Dec 07 2024

எங்கும் வண்ணமயமாக களைகட்டிய ஹல்தி கொண்டாட்டம்..! தனுஷின் கலக்கல் போட்டோஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக காணப்படும் நெப்போலியன் தற்போது தனது மகனின் திருமண நிகழ்வுக்காக ஜப்பானில் குடும்பத்தோடு வந்து இறங்கி உள்ளார். இவரது மூத்த மகனான தனுஷுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில், அதையொட்டிய கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.

நெப்போலியன் மகனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மீனா, ராதிகா, சரத்குமார், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் ஜப்பானில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தமது இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்கள்.

நெப்போலியனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு. இவர் நடிகராக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டி இருப்பார். அதன் பின்பு அரசியலில் பயணித்த இவர், தனது மகனுக்கு ஏற்பட்ட தசைச்சிதைவு நோயின் காரணமாக பிற்காலத்தில் அமெரிக்காவில் செட்டில் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட சிகிச்சைகளையும் அளித்துள்ளார் நெப்போலியன்.

d_i_a

இதைத்தொடர்ந்து தனுஷுக்கு கல்யாண வயது வந்து விட்டதால் அவருக்கு அக்ஷயா என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தமும் பிரம்மாண்டமாக செய்து வைத்தார். தனுஷின் திருமணம் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்த போதும் எல்லாவற்றுக்கும் அமைதியாக இருந்த தனுஷ் ஒரு கட்டத்தில் மிகவும் எமோஷனலாக பேசிவீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில், தனுஷ் அக்ஷயாவிற்கு நடைபெற்ற ஹால்தி கொண்டாட்டத்தை ஒட்டி மணமக்கள் மட்டுமில்லாமல் நெப்போலியனின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மஞ்சள் நிறத்திலேயே ஆடைகளை அணிந்து வெகுவாக இதனை கொண்டாடியுள்ளார்கள். 

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு மணமக்களுக்கு தமது வாழ்த்துக்களையும் முன்வைத்து வருகின்றார்கள்.

மேலும் இந்த ஹால்தி கொண்டாட்டத்தில் தனுஷின்  உருவத்தை மெஹிந்தியாக அக்ஷயா போட்டுள்ளார். ஒரு கையில் தன்னுடைய உருவத்தையும் மற்றைய கையில் தனுஷின் உருவத்தையும் போட்டுள்ளார்.

Advertisement

Advertisement