• Jan 19 2025

ஜப்பானில் விதம் விதமாக போஸ் கொடுத்த நெப்போலியன் டீம்.. தெறிக்கும் போட்டோஸ் இதோ..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் நெப்போலியன் சிறந்த நடிகராக, சிறந்த அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தந்தையாகவும் தன்னுடைய மகன் தனுஷின் திருமணத்திற்கு தயாராகியுள்ளார். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்காகவே சென்னையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன்.

அங்கு தனது மகனின் சிகிச்சைகளை மேற்கொண்டதோடு மட்டுமில்லாமல் அமெரிக்காவில் விவசாயத்தையும் முன்னெடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து தனது மூத்த மகனுக்கு திருமணம் செய்வதற்காக பல இடங்களில் பெண் பார்த்து இறுதியில் அக்ஷயாவை நிச்சயதார்த்தம் செய்து முடித்தார்.

d_i_a

இவர்களுடைய திருமணம் ஜப்பானில் நடைபெற உள்ளதால் தனுஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் கப்பலில் பயணம் செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் என மிகப் பெரிய அளவில் வைரலானது. தனுஷின் திருமணத்திற்கு பல விமர்சனங்கள் குவிந்த நிலையிலும் மனம் தளராமல் தனது மகனுக்குரிய கடமைகளை சிறப்பாக செய்துள்ளார் நெப்போலியன்.


இந்த நிலையில், நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணத்திற்காக நெப்போலியன் இணைந்து நடித்திருந்த சினிமா நட்சத்திரங்கள் மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார் மற்றும் கலா மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதோடு ஜப்பானில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தமது இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்கள்.

80, 90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நெப்போலியன் உடன் குஷ்பூ, ராதிகா, சரத்குமார் மற்றும் மீனா, கலா மாஸ்டர் ஆகியோர்  இணைந்து பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement