• Jan 26 2026

அஜித்தின் "AK 64" பட புதிய அப்டேட்டை வெளியிட்ட ஆதிக்.! என்ன தெரியுமா.?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் வெளியாகும் படங்கள் எப்போதும் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. சமீபத்தில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது புதிய படமான “AK 64” பற்றிய முக்கியமான தகவல்களை வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளார்.


இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், படத்தின் தனித்துவம் மற்றும் தயாரிப்பு குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது, "அஜித் சாரை வைத்து நான் இயக்கப்போகும் படம் ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். 


குட் பேட் அக்லிக்கு கான்ட்ராஸ்ட்டாக இருக்கும். அவரின் கதாபாத்திரமும், திரைக்கதையும் சிறப்பாக வந்திருக்கிறது. வருகின்ற பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்." என்றார். 

இந்தக் கருத்து, AK 64 குறித்த எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. அஜித்தின் தனித்துவமான கதாபாத்திரமும், திரைக்கதையின் தன்மையும் இந்தப் படத்தை பார்வையாளர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில், அஜித் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் mass appeal கொண்டவை. ஆனால் AK 64 படத்தில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் காணப்பட இருப்பது, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும். 

Advertisement

Advertisement