• Apr 25 2026

"கெவி" படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. என்ன தெரியுமா.?

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகளவில் தொடர்ந்து தனது அடையாளத்தை நிலைநிறுத்தி வரும் நிலையில், தற்போது இன்னொரு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆதவன், ஷீலா மற்றும் ஜாக்குலின் நடித்துள்ள ‘கெவி’ திரைப்படம், உலகின் மிக உயரிய திரைப்பட விருதான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி, தமிழ் திரையுலகத்தினரிடையும் ரசிகர்களிடையும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


‘கெவி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. வணிக சினிமா போக்கில் இல்லாமல், தனித்துவமான கதைக்களம், உணர்வுபூர்வமான திரைக்கதை மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் இந்த படம் பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக, மனித உணர்வுகள், சமூகப் பார்வை மற்றும் வாழ்வியல் நெருக்கடிகளை நுணுக்கமாக எடுத்துரைத்த விதம் விமர்சகர்களால் கவனம் பெற்றது.

ஆஸ்கர் விருதுகள் உலக சினிமாவின் மிக உயரிய விருதுகளாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் இதில் போட்டியிடுகின்றன. அந்த அளவிற்கு கடுமையான தேர்வு நடைமுறைகளை கடந்து, ஒரு திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இடம்பிடிப்பதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘கெவி’ திரைப்படம் 96வது ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பிடித்துள்ளது என்பது, தமிழ் சினிமாவின் வளர்ச்சியை உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு முக்கிய தருணமாக கருதப்படுகிறது.

ஆஸ்கர் விருதுகளின் 98வது விழா வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆஸ்கர் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் திரைப்படங்களின் பட்டியல் வரும் ஜனவரி 22ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement