• Jan 05 2025

"game changer" பட ப்ரோமோஷன் நிகழ்விற்காக விஜய்க்கு அழைப்பு..! கலந்து கொள்வாரா..?

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகவுள்ள கேம் சேஞ்சர் படத்தின் நிகழ்வுகளினை பல இடங்களில் நடத்துவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.அதாவது வருகின்ற 7 ஆம் திகதி சென்னையில் இப் படத்தின் நிகழ்வு ஒன்றினை நடத்தவுள்ளனர்.


இவ் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மற்றும் இவ் நிகழ்விற்காக மும்பையில் இருந்து நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு குழு ஒன்று வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தளபதி விஜயை குறித்த நிகழ்ச்சிக்கு அழைப்பதற்கு பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாகவும்,இப் படத்தின் கதையினை முதல் தளபதிக்கு கூறியதாகவும் அவர் கதை மிகவும் பிடித்ததால் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டதாகவும் பின்னர் படத்தினை எடுத்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் வேண்டும் என்பதால் அவர் விலகியதாகவும்.


இப் படக் கதை விஜய்க்கு பிடித்து இருந்தமையின் காரணமாக நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பெரிதும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement