விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட ஜெப்ரி மற்றும் தர்ஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் சமீபத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்டத்தை நோக்கி பிக் பாஸ் வீடு சென்றுகொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரம் ஜெப்ரி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதற்கு முன்பே நடிகை தர்ஷிகா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் அப்போட்டிக்கு பிறகு நண்பர்களாகத் தொடர்வது பயணிப்பது கடினம் ஆனால் இவர்கள் இருவரும் சந்தித்து பேசியதோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!