• Jan 18 2025

விஜய்யுடன் நடிக்க ஆசை... என் கனவு நிறைவேறியது... பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் பேட்டி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை கத்ரீனா கைப் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் தான் டைகர் 3 திரைப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக மெர்ரி கிறிஸ்துமஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி அவருடன் தான் நடித்த அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் Jeddah-வில் நடந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப், மெர்ரி கிறிஸ்துமஸ் படம் குறித்தும் விஜய் சேதுபதியை பற்றியும் பேசினார். "நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது. மெர்ரி கிறிஸ்துமஸ் ஒரு அற்புதமான திரைப்படம். நான் இதுவரை நடித்த படங்களில், இப்படம் தான் கஷ்டமாக இருந்தது. மேலும் விஜய் சேதுபதியுடன் நடிக்கும்போது சவாலாக இருந்தது".


"ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியாக தான் எடுத்தோம். தமிழ் பாதிப்புக்காக நானே தமிழ் பேசி நடித்தேன். இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நடிகர் விஜய் சேதுபதி ஒரு அற்புதமான நபர்" என பேசியுள்ளார். கத்ரீனா கைப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் 2023 வெளியாக இருந்த நிலையில் தற்போது 2024 ஜனவரி 12 திகதி திரைக்கு வரவுள்ளது.  

Advertisement

Advertisement