• Sep 07 2024

புதிதாக கார் வாங்கிய பிக் பாஸ் பிரபலம் தனலட்சுமி! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியளராக பங்கு பற்றியவர்தான் தனலட்சுமி. அவர் டிக் டாக் பிரபலமாக காணப்படுகின்றார். அதன் மூலம்தான் அவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்தது.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் உடன் மட்டுமில்லாமல் சக  போட்டியாளர்களிடமும் முட்டி மோதினார். அதிலும் அங்கு இடம் பெற்ற பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி நடந்து கொண்ட விதம் யாராலும் மறக்கவே முடியாது. அதற்கு காரணம் அந்த டாஸ்க் அசீம் என்னை எந்த இடத்தில் கை வைத்தார் தெரியுமா என்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தார். அதற்கு பிறகு அசீம் தான் என்னுடைய அண்ணன் என கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தனலட்சுமி எதிர்பார்த்தபடி பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இவர், மீண்டும் ரீல்ஸ் செய்வதை வழமையாக கொண்டிருந்தார்.


அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தனது வாழ்க்கை முடிவு மரணம் என்று அவர் போட்ட பதிவால் ரசிகர்கள் பலரும் பதறி அவருக்கு  ஆறுதல் சொன்னார்கள். ஆனாலும் அதன் பின்பு தான் வைரலாக வேண்டும் என சும்மா போட்டதாக பதில் கொடுத்திருந்தார். இதனால் ரசிகர்கள் கடுப்பாக இருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் பிரபலமான தனலட்சுமி புதிதாக கார் ஒன்றை வாங்கி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

 

Advertisement

Advertisement