• Jan 19 2025

'மட்ட மட்ட ராஜ மட்ட' கோட் படத்தின் 4வது சிங்கிள் வரிகள் இதுதானா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் இளையதளபதி விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கோட். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளதுடன் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கோட் திரைப்படத்திலிருந்து இதுவரை மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியான நிலையில், நாளைய தினம் 'மட்ட' என்கின்ற நான்காவது பாடல் பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் வெளியாக உள்ளது. மேலும் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு பாடலை எழுதியதும் பாடலாசிரியர் விவேக் தானாம்.

கோட் படத்திலிருந்து ஏற்கனவே வெளியான சின்ன சின்ன கண்கள் திறக்கின்றது என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். மேலும் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை AI தொழில்நுட்பத்தின்  மூலம் அந்த பாடலில் இணைத்து இருந்தார்கள்.


அத்துடன் கோட் படத்தில் மறைந்த அரசியல் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்கப்பட்டுள்ளார் . அவருடைய காட்சிகளையும் AI தொழில்நுட்ப மூலம் பயன்படுத்தியதற்கு நன்றி கூறும் விதமாக அண்மையில் தயாரிப்பாளர் அர்ச்சனா, இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் ஆகிய மூவரும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவையும் அவருடைய இரு மகன்களையும் நேரில் சந்தித்து தங்களுடைய நன்றிகளை தெரிவித்து இருந்தார்கள்.

எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலக அளவில் கோட் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நாளைய தினம் கோட் படத்தின் நான்காவது சிங்கள் பாடலான 'மட்ட' பாடல் குறித்து தனது கருத்தினை பாடலாசிரியர் விவேக் தனது எக்ஸல பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement