• Jan 18 2025

BB7 Game Changer -க்கு திடீரென வாழ்த்து சொல்லிய பிக் பாஸ் ஆரி அர்ஜுனன்! வைரலாகும் எக்ஸ் பதிவு

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன் 4இல் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் தான் ஆரி அர்ஜுனன். இவர் சக போட்டியாளர்கள் எல்லோரிடமும் கண்டிப்பாக இருந்தாலும் வெளியே இவருக்கு பெரிய நல்ல பெயர் இருந்தது. 

பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கூட இவரை பார்த்த போது நன்றாக விளையாடுகின்றீர்கள் தம்பி என்று பாராட்டும் அளவிற்கு இவரின் ஆட்டம் அந்த சீசனில் மிகவும் சிறப்பாக இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை விட, 7-ஆவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்றது. இரண்டு பிக் பாஸ் வீடு, 18 போட்டியாளர்கள், 5 வைல்ட் கார்ட் என்ட்ரி என முற்றிலும் மாறுபட்டு ஆரம்பிக்கப்பட்டது.


இதை தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர் பிரதீப்க்கு ரெட்காட் கொடுக்கப்பட்டு வௌியேற்றப்பட்டார். இதற்கு தற்போது வரையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 7இல் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ஆரி அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இருந்தார். எனினும் நாட்கள் செல்ல அதனை ரிமோவ் பண்ணி விட்டார்.


இந்த நிலையில், தற்போது 'உங்கள் வெற்றிகரமான திரைப்பட பயணத்திற்கு எனது பிரார்த்தனைகள்' என பிரதீப்க்கு வாழ்த்து சொல்லி உள்ளார் ஆரி அர்ஜுனன்.

அதன்படி, பிக் பாஸ் கேம் செஞ்சர் பிரதீப்க்கு தனது வாழ்த்துக்களை சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement