• Jan 18 2025

அர்ச்சனாவின் தலைக்கனத்திற்கு சரியான செருப்படி! கிழித்து தொங்கவிட்ட ஆரி அர்ஜுனின் ஃபேன்ஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்றவர் தான் அர்ச்சனா. இடையில் இருந்து சென்றதால் என்னவோ அர்ச்சனா ஏற்கனவே இருந்த போட்டியாளர்களை விட சற்று சிறந்து விளங்கினார்.

ஆரம்பத்தில் அழுது புலம்பி நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என பேசி இருந்தாலும், நாளடைவில் தன்னை முழுமையாக மாற்றி, டைட்டில் வின் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது நாட்களை சிறப்பாக நகர்த்தி வந்தார்.

இதை தொடர்ந்து 105 நாட்களைக் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக அர்ச்சனா தான், வெற்றி வாகையும் சூடிக் கொண்டார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று, வெற்றிக் கொண்டாட்டங்கள் ஓய்ந்த நிலையில், தற்போது பேட்டியளித்து வருகின்றார்.

இந்த நிலையில், தனக்கு பிக் பாஸ் ஆரியை விட அதிகளவான மக்கள் வாக்குகள் கிடைத்தாக பேட்டியளித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்கள் ஆரியின் ரசிகர்கள்.

அதாவது, இந்த முறை 19 கோடி மக்கள் வாக்குகளுடன் தான் வெற்றி பெற்றதாகவும், அது முன்னாள் டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த வாக்குகளை விட அதிகம் எனவும் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.


தற்போது அவர் அவ்வாறு கூறிய வீடீயோவை பகிர்ந்த ஆரி அர்ஜுனனின் ரசிகர்கள், ஆரி பண்ணினதுல 1% எபர்ட் கூட அர்ச்சனா பண்ணல.ஒரு வீட்டு வேல செய்ய சொன்னா ஒவ்வொரு சாட்டு சொல்லி எஸ்கேப் ஆவ..உனக்கு இந்த ஆசை வேற இருக்கா என விளாசி உள்ளனர்.

எனினும், இதை பார்த்த ஆரி, அவரை அவர் விருப்ப படி இருக்க விடுங்கள். வெறுப்பை காட்டாதீர்கள் என ட்விட் பண்ணியுள்ளார்.


Advertisement

Advertisement