பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் அதிக சோசியல் மீடியா பிரபலங்கள் பங்கேற்றதால் என்னதான் நடக்குது என்பதை பார்ப்பதற்காக ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.
ஆரம்பத்தில் இதில் கலந்துகொண்ட திவாகர் மீது நெகடிவ் கமெண்ட்ஸ் குவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு மக்கள் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் திவாகரும் பார்வதியும் தான் கன்டன்ட் கொடுப்பதாக பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 11வது நாள் கடந்து வரும் நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம்.

அதில் பிக் பாஸ், ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு விதத்தில் பேமஸ் ஆக இருக்கும். ஆனால் இப்போ வரைக்கும் இந்த சீசன் எதனால பேமஸ் இருக்குது என்று தெரியுமா? என்று ஹவுஸ் மேட்ஸ் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்படி தூங்குறது, மைக் மாட்டல என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மேலும் பலமுறை மைக் மாட்டவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
துஷார் நீங்க பலமுறை மைக் மாட்ட மறந்துட்டீங்க நீங்க எப்படி மற்றவங்களை டிசிப்ளின் பண்ணுவீங்க.? உங்களுக்கு வீட்டு தலைவர் பதவி தேவையில்லை.. உங்களிடமிருந்து வீட்டு தலைவர் பதவி பறிக்கப்படுகிறது என்றார் பிக் பாஸ்.
Listen News!