• Nov 23 2025

'பைசன்' இங்கிலீஷ்ல வைக்க இதுதான் காரணம்.! மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் பைசன். வாழைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ்  இயக்கும் படம் இதுவாகும்.  இந்த படத்தை நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரெஜிஸ்டா, விஜயன், பசுபதி, கலையரசன், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். 

இப்படம்  அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியை சேர்ந்த கபடி வீரர் ஒருவரின்  வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாம்.  இப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 


இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பைசன் படத்திற்கு ஆங்கிலத்தில் டைட்டில் வைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் மாரி செல்வராஜ். 

அதாவது  படத்திற்கு பைசன் என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது. என்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் 'காளமாடன்' என்று தான் உள்ளது  என்று கூறியுள்ளார். 




 

Advertisement

Advertisement