• Oct 30 2025

மீண்டும் மயங்கி விழுந்த ரம்யா .. பரபரப்பில் பிக் பாஸ் ஹவுஸ்.! மக்களின் ஆதரவு எகிறுமா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ்  சீசன் 9 கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி இருந்து ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது இதன் இரண்டாவது வாரத்தில்  ஆட்டம் போய்க் கொண்டு உள்ளது.  முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார். 

இந்த நிலையில்,  பிக் பாஸ் ஹவுஸில் கண்ணீர் மூழ்கியுள்ளது. அதாவது  ரம்யா ஜோவின் கதையை கேட்டு  பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கதறி அழுத காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

ஏற்கனவே ரம்யா  தான் சாப்பாட்டிற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டதாகவும், பிச்சை எடுத்ததாகவும், சித்தியின் கொடுமை பற்றியும் பேசியிருந்தார்.  இதனால் ரம்யா மீது சக போட்டியாளருக்கு ஒரு பரிவு ஏற்பட்டது. 


அதன் பின்பு நேற்று  சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பகிர்ந்து உள்ளார். இதன் போது  கண்மூடித்தனமான காதலினால் மூன்று முறை ஏமாற்றப்பட்டதாகவும்  தெரிவித்தார்.  ரம்யாவின் கதையை கேட்ட மக்கள்  அவருக்கு ஆதரவு கொடுக்க தயாராகி விட்டனர். 

மேலும்  ரம்யாவுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று  சபரி, விக்கல்ஸ்  விக்கி, அரோரா,  சுபிக்ஷா  போன்றவர்கள் கதறி அழுதும் இருந்தனர்.  அதன் பின்பு ரம்யா திடீரென  மயங்கி விழுந்தார். அவருக்கு  மருத்துவர்கள் சிகிச்சையும் அளித்தனர்.  இதுதான் நேற்று நடந்த சம்பவம் .

தற்போது இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.  அதாவது ரம்யா தனக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே இவ்வாறு ஸ்டோரி சொல்லி  மக்களின் மனதை வென்று விட்டார் என்றும், மயங்கி விழுந்தது கூட ஒரு நாடகம் தான்  என்றும் பேசப்படுகிறது. 




Advertisement

Advertisement