தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான நடிப்பால் மக்கள் மனங்களை கவர்ந்த நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களைப் பற்றிய தனது பார்வையை பகிர்ந்துகொண்டுள்ளார். அவரது கூற்றுக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன., "வில்லனா நடிக்கும்போது அதிகளவு சுதந்திரமாக இருக்கும். ஆனால், ஹீரோவாக இருந்தால் அது இருக்காது," என விஜய் சேதுபதி கருத்து தெரிவித்தார்.
அவர் கூறிய கருத்து திரையுலக ரசிகர்களிடையே புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது. வில்லன் கதாபாத்திரங்களுக்கு எழுத்தாளர்கள் அதிகமான சுதந்திரத்தையும் பல்வேறு பரிமாணங்களையும் வழங்குகின்றனர். இதனால், அந்த கதாபாத்திரங்களை மெருகேற்றுவதற்கான அதிக வாய்ப்புகள் நடிகர்களுக்கு கிடைக்கின்றன.
விஜய் சேதுபதி, தனது திரைப்பட வாழ்க்கையில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்திருக்கிறார். தொடக்கத்தில் அவரை காமெடி மற்றும் உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களில் பார்த்திருந்தாலும், ‘விக்ரம் வேதா’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்ததன் மூலம் அவரது நடிப்பு இன்னும் அதிக கவனம் பெற்றது. குறிப்பாக, ‘விக்ரம் வேதா’ படத்தில் வேதா கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
விஜய் சேதுபதியின் இந்தக் கருத்துக்கு திரையுலகின் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர், இயக்குனர்கள் பலர் “இந்த கூற்று உண்மையிலேயே சரியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் இதனை ஒப்புக்கொண்டு, "வில்லன் கதாபாத்திரங்களை நடிகர்கள் உணர்ச்சிப்பூர்வமாகவும் , தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கும் ஒரு தளமாக பார்க்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளனர். விஜய் சேதுபதியின் இந்தக் கருத்து திரையுலகத்தில் ஒரு புதிய கோணத்தை முன்வைக்கிறது.
Listen News!