தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியை உருவாக்கிய அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபாலின் ‘அஸ்திரம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கங்களை விட்டு வெளியேறும் ரசிகர்கள் படக்குழுவைப் பாராட்டியுள்ளனர். அவர்கள் கூறியதாவது, ‘அஸ்திரம்’ படம் ஷாமின் திரைப்பட வாழ்க்கையில் புதிய திருப்புமுனையாக இருக்கும் என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
‘அஸ்திரம்’ படத்தின் ஹைலைட் என்னவென்றால், அது ஒரு குற்றவியல் திரில்லராக இல்லாமல், உளவியல் நுணுக்கங்கள் மற்றும் மிகச்சிறந்த திரைக்கதை மூலம் விரிந்து செல்லும் பாணியில் அமைந்துள்ளது. மேலும் முதலிலிருந்து கடைசி வரை மர்மம் நிலவும் வகையில் படம் உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளனர்.
அரவிந்த் ராஜகோபால் இதுவரையில் பெரிய இயக்குநர் அல்ல எனினும் இப்படத்தின் மூலம் இவர் அடுத்த ஹிட் இயக்குநராக மாறலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Listen News!