சின்னத்திரை நடிகையாகவும், நகைச்சுவைப் பேச்சாளராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் டீவியில் பல நிகழ்ச்சிகளில் தனது தைரியமான பேச்சும் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் வாயிலாக ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்த நிஷா, சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் தகவலால் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அறந்தாங்கி நிஷா வளர்ந்த கிராமச் சூழலில் ஒரு பெண் காமெடியனாக உயர்வது சற்று கடினமான விடயம். எனினும் தனது தனித்துவமான பேச்சுத் திறமை மூலம் அவருக்கு அதிகளவான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் பல ரசிகர்கள், நயன்தாராவைப் போல் கம்பீரம், நம்பிக்கை ஆகியவை நிஷாவிடமும் உள்ளன எனக் கூறி, “சின்னத்திரை நயன்தாரா” என அழைக்கத் தொடங்கினார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஒருவருடைய அடையாளத்தை மற்றொருவருடன் ஒப்பிட்டு வகைப்படுத்துவது வழக்கம். சமீபத்தில், நடிகை நயன்தாரா ஒரு பேட்டியில் “இனிமேல் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்” என்று உருக்கமாக கூறியிருந்தார். அந்தக் கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதே போலவே, தற்பொழுது நிஷாவின் கருத்தும் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறியதாவது, தன்னை யாரும் “சின்னத்திரை நயன்தாரா” என்று அழைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். அறந்தாங்கி நிஷாவின் இந்தக் கருத்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். மேலும் ஒரு பெண் நடிகை தனது சொந்த அடையாளத்திற்காக குரல் கொடுப்பது இன்று முக்கியமாகவே காணப்படுகிறது.
Listen News!