• Oct 30 2024

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கவுள்ள வைல்ட் காட் போட்டியாளர்கள் மூவரும் இவங்க தானா?- மரண பீதியில் ஹவுஸ்மேட்ஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பல்வேறு புதுமைகளுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதுமட்டுமின்றி இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஒரே நாளில் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார் பிக்பாஸ்.

அந்த வகையில்  அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி, பிராவோ ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக சென்ற நிலையில், அதில் அன்ன பாரதி, கானா பாலா ஆகியோர் ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்டனர். தற்போது 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதுதவிர முதலில் இருந்து ஆடி வரும் 11 போட்டியாளர்களும் அவர்களுடன் அனல்பறக்க மோதி வருகின்றனர். 

இந்த நிலையில் தந்பொழுது  மேலும் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் டுவிஸ்ட் என்னவென்றால் அவர்கள் மூவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மூவருடன் போட்டியிடுவார்கள்.


அந்த போட்டியில் வைல்டு கார்டாக உள்ளே வரும் 3 பேர் ஜெயித்துவிட்டால் அவர்களுடன் போட்டியிட்ட 3 பேரும் வெளியே அனுப்பப்படுவார்களாம். இதனால் பிக்பாஸின் இந்த அறிவிப்பு போட்டியாளர்களுக்கு மரண பயத்தை கொடுத்துள்ளது. தற்போது வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ள மூன்று போட்டியாளர்கள் யார் என்கிற தகவலும் கசிந்துள்ளது.

அதன்படி  அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா தேவி, ஆகிய மூவருமே என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹவுஸ்மேட்ஸ்  கடும் குழப்பத்தில் உள்ளனர் ன்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement