• Oct 30 2024

ஒரே அசிங்கமா போச்சி... எஸ்.ஜே சூர்யாவை வேணான்னு சொல்லிட்டேன்... வெளிப்படையாக கூறிய கார்த்திக் சுப்புராஜ்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ஒரே மாதிரியான கதையம்சத்தை கார்த்திக் சுப்புராஜ் வடிவமைத்திருந்தார்.மிரட்டலான ரவுடிகளிடம் சிக்கிய அப்பாவி இயக்குனரின் கதை தான்  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ஒன் லைன் ஸ்டோரி. 


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மிரட்டலான வில்லன் கேரக்டரில் நடிக்க ஓகே ஆகிவிட்டார். இன்னொரு முக்கியமான கேரக்டரில் எஸ்ஜே சூர்யாவை நடிக்க திட்டமிட்டனர்.இதில் முதலில் யாரையுமே நடிக்க வைக்க தோணல, அதனால் எஸ்ஜே  சூர்யாவை கார்த்தி சுப்புராஜ் தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவரிடம் இந்தப் படத்தின் கதையை சொல்லியிருக்கிறார். கதை கேட்ட பின் எஸ்ஜே சூர்யா 5  நாட்களுக்குப் பிறகு முடிவு சொல்வதாக கூறிவிட்டாராம்.


உடனே கார்த்திக் சுப்புராஜுக்கு அசிங்கமாய் போய்விட்டது. என்னுடைய கதை அவருக்கு செட் ஆகல, அதனால் அவரிடம் நீங்க வேண்டான்னு சொல்லிட்டு கிளம்பிட்டார். அதன் பிறகு தான் எஸ்ஜே சூர்யா மீண்டும் வந்து கார்த்திக் சுப்புராஜிடம் பேசி இருக்கிறார். அவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிக்க ஓகே சொன்னாராம்.


ஆனால் கார்த்திக் சுப்புராஜ் எஸ்ஜே சூர்யாவிடம் யோசிச்சு சொல்றேன் என்று தட்டிக் கழித்திருக்கிறார். அதன் பின்பு எல்லாம் ஓகே ஆனது, படமும் இப்போ ஹிட் ஆயிடுச்சு என்று கார்த்திக் சுப்புராஜ் இந்த படம் துவங்குவதற்கு முன் என்னென்னவெல்லாம் நடந்தது என்ற சீக்ரெட்டை இப்போது அவிழ்த்து விட்டிருக்கிறார். 

Advertisement