• Jan 19 2025

ரியல் கர்ணனாகவே மாறிய அறந்தாங்கி நிஷா! கண்ணீரில் நன்றி சொல்லிய பெண்கள்? குவியும் பாராட்டுக்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபற்றி, இரண்டாம் இடத்தினை பெற்றவர் தான் அறந்தாங்கி நிஷா.

தமிழ் சினிமாவால் நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் அறந்தாங்கி நிஷா.

மேலும் ஸ்டான்ட் அப் காமெடிகளால் ஆண்கள் மற்றும் குழந்தைகளை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் அறந்தாங்கி நிஷா.


கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இவர் வந்தாலே போதும் எல்லோரையும் சிரிக்க வைக்காம விடமாட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

இதை தொடர்ந்து, அண்மையில் இடம்பெற்ற வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று தன்னால் முடியுமான உதவிகளை செய்து இருந்தார்.

இந்த நிலையில், அடிப்படை வசதி இல்லாத குடும்பம் ஒன்றிற்கு டாய்லெட் கட்டிக் கொடுத்துள்ளார் நிஷா.

தற்போது அவரின் இந்த செயல் வைரலான நிலையில், பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement